தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை  டிசம்பர் 20ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: