ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் வழங்கி வைக்கப்பட்டது.


கொவிட் -19 யில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு  இன்று இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) வழங்கி வைக்கப்பட்டது.

ஆயுர்வேத மாகாண ஆணையாளர் Dr. இ.சிறிதரின் ஆலோசனையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,பிராந்திய தொடர்பாளர்  Dr.M.A நபீல் ஆகியோரின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர்  த.கிரோஜாதரன் தலைமையில் மூலிகைப் பானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மருத்துவ பொறுப்பதிகாரி, ஆயுர்வேத மத்திய மருந்தகம்  ஆலையடிவேம்பு Dr.த.குவிதாகரன் மற்றும் பிரதேச சபை செயலாளர்  இ.சுரேஸ்ராம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.




No comments: