அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடர்ந்து 14 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
தலாவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் , செயலாளர், ஊழியர்கள் 10 பேர், பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 14 பேர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ள
அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பை பேணியவர்களை அடையாளம் கண்டு சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொண்ட போதே இன்று (22/12/2020) மேற்படி 14 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 19 ஆம் திகதி தலவாக்கலை நகரசபையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சி.பி ரத்தாநாயக்க,இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,பாராளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ மற்றும் நகர அபிருத்தி அதிகார சபை தலைவர் ஹரிசாந்த சில்வா ஆகியோரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார காரியாலய வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.கணேசன்
தெரிவித்தார்.
மேலும் ஹட்டன் டிக்கோயா நகரசபை , அம்பகமுவ,கொட்டகலை,
மஸ்கெலியா,நோர்வூட், நுவரெலியா பிரதேசசபை தலைவர்கள் 21 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா,நோர்வூட், நுவரெலியா பிரதேசசபை தலைவர்கள் 21 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: