மூன்று மாதங்களுக்கு தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி


மூன்று மாதங்களுக்கு தேங்காய் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேங்காய் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அதனைப் பெற்றுக் கொடுக்கவும், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் பாதுகாக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சின் கீழ் BCC மூலம் 3 மாதங்களுக்கு 13,000 மெட்ரிக் தொன் துண்டாக்கப்பட்ட தேங்காயை இறக்குமதி செய்ய இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: