ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமையில்

க.கிஷாந்தன்


கழிவகற்றல் முறைமை தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி செயலர்வுக்குச் சென்ற அட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர். ஆர். மெதவெல்ல தெரிவித்தார்

 

கண்டி நவயாலதென்னையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட மாநகர சபை, நகர சபை ஊழியர்களுக்கு மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டது

 

இந்த வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாத்தளை மாநகர சபை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்தே செயலமர்வுக்குச் சென்ற அட்டன் – டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்,

No comments: