வாக்களிக்க வந்தவர் திடீரென உயிரிழப்பு
பாணந்துறை பெக்கேகம வாக்குச்சாவடி நிலையத்திற்கு வாக்களிக்க வருகைத் தந்த 81 வயதுடைய நபர் ஒருவர் வாக்குச்சாவடியில் வைத்து திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: