வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்தவர் கைது
பிலியந்தலை கோணமடித்த ஸ்ரீ சுத்தானந்த விஹாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த ஒருவர், தான் வாக்களித்த வாக்களிப்பு அட்டையை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வாக்களிக்க பயன்படுத்திய வாக்காளர் அட்டையை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்த ஒருவர் நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, வாக்களித்த வாக்காளர் அட்டையை புகைப்படம் அல்லது ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: