க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், தனிப்பட்ட  விண்ணப்பதாரிகளிடம் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாமையினால் விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பீஜித தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: