வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்
வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
எந்தவித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது கல்வி பொது தராதர சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும், பயிற்சி பெறாதவர்களும்,விண்ணப்பம் கோரப்படும் திகதியில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 வயதை விட அதிகமாகவும் இருக்காமை,சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருப்போர் இந்த தொழிலுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு,தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் என ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

No comments: