பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பம்
இதற்கமைய இன்றைய தினத்தில் 200க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவில் முதலாம் மற்றும் 5ம் தர மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் 2ம் மற்றும் 5ம் தர மாணவர்கள் பாடசாலைக்கு மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 200க்கும் அதிக எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமை பின்பற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி இன்றைய தினத்தில் 6,10,11,12 மற்றும் 13ம் தரங்களில் பயிலும் மாணவர்களும்,செவ்வாய் கிழமைகளில் 7,10,11,12 மற்றும் 13ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளில் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட மாட்டாது எனவும் இந்த பாடசாலைகளுக்கு வழமைப் போன்று சகல மாணவர்களும் சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கல்வி பணிக்குழாமின் அனைவரும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சுகாதாரம் மற்றும் ஒழுக்க பாதுகாப்பு பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: