இறக்குவானை, மாதம்பை மக்களின் இயல்பு வாழ்வு திரும்பும் வரை இ.தொ.கா பாதுகாப்பை உறுதி செய்யும் -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 



வீதி அபிவிருத்தி காரணமாக கோயில் காணியின் அளவு குறுகியதையடுத்து இறக்குவானை, மாதம்பை தோட்ட இளைஞர்கள் ஹபுகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மாதம்பை தோட்டத்தின் தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில் சிலையொன்றினை ஸ்தாபித்ததை தொடர்ந்து பெரும்பான்மையினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக மாதம்பை தோட்ட இளைஞர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, அவர் நேற்றிரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு  கொண்டு வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தின் பொலிஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. 

மேலும், இவ் விடயம் குறித்து ரூபன் பெருமாள் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இவ் விடயம் தொடர்பாக தாம் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாதம்பை மக்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் குறித்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.


No comments: