பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சந்தேக நபர் தப்பியோட்டம் - காயங்களுக்குள்ளான பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 





நோர்வூட் பகுதியில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் நாவலபிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 29.08.2020.சனிக்கிழமை இரவு 7.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த பெண் நேற்றைய தினம் நோர்வூட் நகர பகுதிக்கு வந்து மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை பின்னோக்கி சென்று கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டி தப்பி சென்றுள்ளதாகவும், காயமடைந்த பெண்ணை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணை வெட்டிய நபரை நோர்வூட் பொலிஸார் தேடிவருவதோடு நோர்வூட் நகர பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீ. சீ. டிவி. கேமராக்களையும் பொலிஸார் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண்ணை எதற்காக இனந்தெரியாத சந்தேக நபரினால் வெட்டப்பட்டடார் என்ற  காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸாரின்  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் நோர்வூட் மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: