நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், சென்னையில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு  தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2839 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2537 ஆக  அதிகரித்துள்ளதோடு, கொரோனா தொற்றுறுதியான மேலும் 291பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


No comments: