இன்றைய தினம் மதியம் 12 மணிக்குப் பின்னர் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9வது பாராளுமன்றத்திற்குப் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலின்  முடிவுகள் இன்யை தினம் வெளியாகவுள்ளன.

காலை 7.00 மணிமுதல் அந்தந்த மாவட்டங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் மதியம் 12.00 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹீல் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 77 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்  ஸ்தாபிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments: