தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய பட்டியலில் தெரிவான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னரே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் கிடைக்கப் பெற்றதை அடுத்து,அதனை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்கழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றதாக தெரியவந்துள்ளது.

No comments: