லெபனான் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கத் திட்டம்

லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக தமது அலுவலகம் நாளாந்தம் செயற்படுவதாக அங்குள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் 10 இலங்கையர்கள் காயமடைந்த நிலையில்,அவர்களில் 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெருமளவான இலங்கையர்கள் துாதரக அலுவலகத்துடன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும்,பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் செயற்பாடு தற்போது முழுமையாக இடம்பெற்று வருவதாகவும் இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தகவல்களை வழங்குவதற்காக வெபனானிலுள்ள இலங்கைத் துாதரகத்தில் 24 மணித்தியாலங்களும் இயங்கும் 096 157 69 585 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: