இந்தியாவில் இருந்து இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

இந்தியாவில் நிர்க்கதியுள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கிப் பயணித்த யு எல் 1160 எனும் விமானம் ஊடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2.00 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: