நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதிவு


ரணில் விக்ரமசிங்க இன்று காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகினார்.

நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகினார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரிகள் என பலரிடம்  ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: