அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை உருவாக்க நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நிபுணர் குழுவினால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையால் அவை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளதோடு இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், நிபுணர்குழுவிற்கு திட்டங்களை சமர்ப்பிக்க அமைச்சரவை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவினை வழங்கவில்லை என்றும் திட்டங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதன்கிழமைக்குள் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அது வாரம் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இடமபெற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை இரத்து செய்யவும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை உருவாக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதனை அடுத்து 20 ஆவது திருத்தத்தை உருவாக்க நிபுணர் குழு ஒன்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, தினேஷ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: