உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், அதனடிப்படையில் 20,022,265 பேர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 733,971 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64,950 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: