சீனி தொழிற்சாலையை ஆரம்பிப்பேன்-சஜித் பிரேமதாச தெரிவிப்பு


நேற்று மாலை கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாச,நான் நாட்டின் பிரதமராக பதவியேற்று ஒருவாரத்தில் கந்தளாய் சீனி தொழிற்சாலையை ஆரம்பிப்பேன் என தெரிவித்திருந்தார்.

அத்தோடு எரிபொருட்களின் விலைக்குறைப்பு, மக்களின் வரிச்சுமைக்குறைப்பு  மற்றும் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு என பல பிரச்சினைகளுக்கு தீர்மானம் பெற்றுக் கொடுப்பதாகவும் கந்தளாய் சீனி தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments: