கற்பித்தல் செயற்பாடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்


நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 5ம்,11ம் மற்றும் 13ம் தர வரகுப்பு மாணவரகள் இன்று பாடசாலை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தரம் 11 மற்றும் 13ம் தர மாணவர்களுக்கு காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரையும், தரம் 5 மாணவர்களுக்கு காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் 20ம் திகதி தரம் 10,12ம் வகுப்பு மாணவர்களும், அடுத்த மாதம் 27ம் திகதி 3,4,6,7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

No comments: