எதிர்வரும் 27ம் திகதி முதல் சகல ஆசிரியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டும்கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைகளுக்கு மாறாக மாகாணக்கல்வி பணிப்பாளர்கள் வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

சில அதிபர்கள் ஆசிரியர்களை சேவைக்கு மீள அழைக்கும் செயற்பாட்டில் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுக் கூடுவதை தவிர்ப்பதற்கான சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் சகல ஆசிரியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

No comments: