வீரத்தினையும் தைரியத்தையும் வைத்து உரிமைகளை பெற்று கொடுக்கமுடியும். -ஜீவன்


(எஸ்.சதீஸ்)

இலங்கை தொழிலாளர்காங்ரஸின் ஸ்தாபகதலைவர் அமரர் செளமியமுர்த்தி தொண்டமானுடைய பேரனாக என்னை பார்க்காவிட்டாலும் கங்கானி கருப்பையாவுடைய கொள்ளுபேரனாக தன்னை பார்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான மக்கள் சந்திப்பு 27.06.2020சனிகிழமை பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனைதெரிவித்தார். 

மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட அதன் உபதலைவர் அனுசியா சிவராஜா நுவரெலியா மாவட்ட வேட்பாளர்கலான மறுதபாண்டி ராமேஸ்வரன் கணபதிகனகராஜ் இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் பி.இராஜதுறை நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவி குழந்தைவேல் மற்றும் பலரும் கலந்துகொண்டனர் 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கபாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால் தேயிலை கொழுந்தினை பறிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ அதிகமாக பறிக்கப்பட வேண்டுமெனவும் இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் மேலதிகமாக ஒரு லீற்றர் பாலினை நாள் ஒன்று அதிகம்பறிக்கபட வேண்டுமென்ற நிபந்தனை ஒன்றை முன்வைத்தது பெருந்தோட்ட நிறுவனங்கலால் வைக்கப்பட்ட நிபந்தனைக்கு நாம் இணங்கவில்லை. 

பெருந்தோட்ட நறுவனங்களுக்கு தெரியாது தேயிலை தோட்டங்களில் எந்தளவிற்கு தேயிலை கொழுந்து காணப்படுமென்று அது தொழிலாளர்களுக்கு மாத்திரமே தெரியும் 

எனது தந்தை என்னிடம் கூறியதுயெல்லாம் தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாயினை பெற்றுகொடுக்கவேண்டுமென அவர் உயிரிழக்கும் முன்பு கூட அதைதான் என்னிடம் கூறினார் பொதுதேர்தலுக்கு பிறகு மக்கள் எனக்கு அதிகாரத்தை வழங்குங்கள் செளமிமுர்த்தி தொண்டமானுடை சணக்கியம் நிதானம் அதேபோல் ஆறுமுகன் தொண்டமானுடைய வீரத்தினையும் தைரியத்தையும் வைத்து மக்களின் உறிமைகளை என்னால் பெற்று கொடுக்கமுடியும்.
 
ஆறுமுகன் தொண்டான் மக்களை ஒற்றுமையாக இருக்குமாறுதான் வழியுருத்திவந்தாரே தவிர எனது கட்சிக்கு வருமாறு யாரையும் கூறியதில்லை இருதியில் அவர் இறந்தபிறகுதான் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை கானகூடியதாக உள்ளது
அதனை பார்க்க இன்று அவர் இல்லை

நான் ஆறுமுகன் தொண்டமானுடைய புதல்வனாக வந்து நான் இங்கு வாக்கு
கேட்கவில்லை மலையகத்தைச்சார்ந்த ஒரு இளைஞனாக வந்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்கிறேன் மலையகத்தில் உள்ள சிலர் கூறியதெல்லாம் சம்பள பிரச்சினை வீதிபிரச்சினை வீடுபிரச்சினை போன்றதை பற்றிதான் விமர்சனம் செய்வார்கள் 

மக்களுக்கு வீடு என்பது அவசியம் ஆனால் அதற்கெல்லாம் பொருளாதாரம் முக்கியமான ஒரு விடயம் மலையகத்தில் இன்று எத்தனையோ இளைஞர்கள் கல்வியினை முடித்தும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள்

 இது போன்ற பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வினை பெற்று கொடுக்க முன்வருவதில்லை ஒருபகுதியில் வீடமைப்பினை மாத்திரம் அமைத்து கொடுத்தால் போதாது அங்கு பொருளாதாரத்தினை தேடிகொள்ளும் வகையில் அதற்கான நடவடிக்கையினையும்ஏற்படுத்திகொடுக்கவேண்டும்

ஆனால் இங்கு பசளையிடுவது போல் அங்கும் இங்கும் வீடுகளை தூவிவிட்டிருக்கிறார்கள் இலங்கை தொழிலாளர் காங்ரஸிக்கு முதன் முறையாக ஒரு இளமையான தலமைத்துவம் கிடைத்துள்ளது 

மக்கள் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தால் எனது மக்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக எதிர்வரும் காலங்களில் நான் இருப்பேன் இன்று மலையகத்தில் உள்ளஇளைஞர்யுவதிகள் வெளிநாடுகளுகக்கு சென்று விளையாட்டு துறையில் சாதனைபடைத்துள்ளார்கள் 

மலையகத்தில் உள்ள அமைச்சர்கள் அதனைபற்றி பேசுவதில்லை இவர்கள் ஒன்றுமே இல்லை என்றுதான் கூறுகின்றனர் செமியமுர்த்தி தொண்டமான் காலப்பகுதியில் அநேகமான தொழிபேட்டைகள் அமைக்கப்பட்டன மலையகத்தில் உள்ள ஒரு முக்கயமான விடயம்தான் 

அதிகாரத்தை வழங்குங்கள் மலையகத்தை ஒரு சுற்றுலா பிரதேசமாக மாற்றிகாட்கிறோம் அத்தோடு படித்த இளைஞர்யுவதிகளுக்கு தொழிவாய்ப்பினை வழங்கமுடியும் என்றார்.

No comments: