தேர்தலை முன்னிட்டு இலங்கை பொலிசார் அதிரடி


கடந்த காலங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்பதற்காக நாட்டில் பல்வேறு இடங்களில் வர்ணப்பூச்சுகள் பூசப்பட்டது. 

இருந்தும் எதிர்வரும் தேர்தல் பிரச்சாரமாக சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பிரச்சார பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவற்துறைமா அதிபர் ஆலோசனை வழங்கியதோடு இதனை அகற்றும் நடவடிக்கையானது சகல பிராந்தியங்களுக்கும் பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் நாட்டில் சகல காவற்துறை நிலையங்களுக்கும் இத்தகவலை அறிவித்ததோடு விசேட வீதித்தடை நடமாடும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வீதிகள் மற்றும் பொது இடங்களில் சட்ட விரோதமாக காடசிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பதாதைகள் என்பன அகற்றப்படும் என காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: