மனோ கணேசனுடன் மோதுகின்றாரா கருணா அம்மான் ?


கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை (27) அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தலையிடத் தேவையில்லை வடக்கு கிழக்கு பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை.

கல்முனை மக்கள் அடித்து துரத்தியதை அதை மறந்து விட்டார் போல. இனிமேல் வந்தால் மக்கள் துரத்தி அடிப்பார்கள் என தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எனக்கு இருக்கின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக்கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் கூறுகின்றேன்.

வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச்சமூகம் குழிதோண்டிப் வைக்கப்படுவார்கள் என்று கூறிக்கொள்கிறேன்.

No comments: