மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள  சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தியாலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: