மீண்டும் ஆரம்பமாகவுள்ள பேருந்து முன்னுரிமைப்பாதை இரண்டாம் கட்ட நடவடிக்கை
பேருந்து முன்னுரிமைப்பாதை இரண்டாம் கட்டச் செயற்றிட்டமானது கொழும்பின் இங்குறுகொடை சந்தி முதல் கொழும்புக் கோட்டை வரையிலான பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் நாளை காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதேவேளை பேருந்து முன்னுரிமைப்பாதை முதலாம் கட்டம் 22ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்பேருந்து முன்னுரிமைப்பாதை நடைமுறை காலை 6 மணி முதல் 9 மணிவரை செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும் பேருந்து முன்னுரிமைப்பாதைக்குள் பேருந்துகளுக்கு மாத்திரம் உரிய நேரத்தில் அனுமதி வழங்ஙப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments: