மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி


பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 17 பேர் குணமடைந்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையாக 1678 பேர் காணப்படுகின்றனர்.

No comments: