11 வது மரணம் பதிவானது இலங்கையில்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11ஆவது மரணம் இன்று பதிவாகியுள்ளது.
45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இவர் சமீபத்தில் குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: