அம்பாறை ஆலையடிவேம்பில் வர்த்தக நிலையம் தீக்கிரை


(அகத்தியன் செய்தி)

அம்பாறை மாவட்டம் ஆலையடிவம்பு பிரதேசத்தில் அமைந்திருக்கும் புகைப்பட வர்த்தக நிலையமொன்று இன்று காலை எதிர்பாராத விதமாக தீக்கிரையகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று காலை வழமைபோன்று நிலைய ஊழியர்கள் புகைப்படம் பிடிப்பதற்காக குறித்த வர்த்தக நிலையத்தினுள் உள்ள புகைப்படக்கருவிகளை எடுத்து விட்டு சென்றுள்ளனர் இதன் பின்னர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  மின்னொழுக்கு காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து தொழில் நுட்ப சாதனைங்களும் ஏனைய பொருட்களும் முற்றாக சேதமைடைந்துள்ளது.

லெட்ச கணக்கான பொருட்கள் எரிந்து போயுள்ளதாகவும் தெரியவருகின்றது உடன் சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறித்த அனர்த்தத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் எமது செய்தியாளர ் குறிப்பிட்டார்.

No comments: