UPDATED: தலங்கம வைத்தியசாலையில் இருந்து தொண்டமானின் பூதவுடல் வெளியே கொண்டுவரப்பட்டது


தலிங்கம வைத்தியசாலையில் இருந்து வெளியே தொண்டமானின் பூதவுடல் கொண்டுவரப்பட்டது 




UPDATED NEWS.

(க.கிஷாந்தன்) 

திடீர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பலம்பெறும் அரசியல்வாதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

அவர் தனது 55 வது வயதில் காலமாகி உள்ளார்.

அவசர சுகயீனம் காரணமாக கொழும்பு - தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு காலமாகி உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது.

1964 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.

இலங்கையில் பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்த அவர் இறுதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை வகித்தார்.


No comments: