UPDATED: விசாகப்பட்டினத்தில் எரிவாயு கசிவினால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு


விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்ததால் 07 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்து இந் நிலையில்

ரசாயன வாயு கசிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை  ஒன இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன் சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு அகத்தியனுடன் இணைந்திருங்கள் 


No comments: