அரச ஊழியர்களின் மே-மாத சம்பளத்தினை அர்ப்பணிக்க வேண்டுகோள் !


அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு  அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி செயலாளர்   வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவிற்காக மாதமொன்றுக்கு தலா 100 பில்லியனுக்கும் அதிக நிதி தேவைப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர  சுட்டிக்காட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழிர்களும் தமது மே மாத சம்பளத்தை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாவிட்டாலும்   சம்பளத்தின் ஒருபகுதி  அல்லது  வார சம்பளம்  அல்லது ஒரு நாள் சம்பளத்தையாவது அர்பணிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய  நிலைமை தொடர்பில் விளக்கமளித்து இலங்கையில் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கு அவர்களது நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.

ஒரு மாத சம்பளத்தை பெறாமல் அதனை விதவைகள் கொடுப்பனவிற்கு உபயோகித்தால் நாட்டின்  வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைக்க முடியும் எனவும் P.B.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

No comments: