விகாரமகாதேவி பூங்காவில் ராஜிதவிற்காக இன்று சர்வமத பிராத்தனை


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் 70 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு கொழும்பு மாநகரசபைக்கு முன்னபாக (விகாரமகா தேவி பூங்கா)   இன்று மாலை ஜக்கிய மக்கள் சக்தி பங்காளி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்கள் சர்வ மத பிராத்தினையில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சருமான (சஜித் பிறேமதாச மற்றும் மனோ-கணேசன். பாட்டாளி சம்பிக்க ரணவக்க , ரவூப்ஹக்கிம்) ஆகியோருடன் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் கொழும்பு மநகர சபை உறுப்பினர்கள் அனைவரும்  அரசியல் பிரமுகர்களும் கட்சி தொண்டர்களும்  இதில் கலந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ-கணேசன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன் போது (இந்து , பௌத்த, கிறிஸ்தவ) மத அனுஷ்டானங்கள் இடம் பெற்றுள்ளதுடன்  சுகாதார அறிவுறுத்தல்கள் இங்கு பின்பற்றப்பட்ள்ளமை சுட்டடிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் எமக்கு  கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மனோ-கணேசன்

ராஜித சேனாரத்னவை பொறுத்த மட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற ஒருவர் அனைத்து இன-மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எண்ணமும் நிறைந்த மனிதர்.

நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களை வைத்து அரசாங்கம் முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரட்ணவை பழிவாங்குவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







No comments: