பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் விசேட செய்தி !


மே மாதம் 11ம் திகதி சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந் நிலையில் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பது  தொடர்பில் ஒவ்வொரு நிறுவனங்களும் மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளததாக அறியமுடிகின்றது.


இதனடிப்படையில் கல்வி அமைச்சிற்கும்  சுகாதார வழிமுறைகள் தொடர்பிலான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுளளது.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு  பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலினை செய்யும்  நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளர்.






No comments: