பிரதமருடனான கூட்டம் நிறைவடைந்தது | அறிக்கை சமர்ப்பித்த சம்மந்தன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதனடிப்பிடையில் இன்று பிரதமர் மற்றும் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அலறிமாளிகையில் நடை பெற்று முடிந்துள்ளது.
இன்று 10.15 ற்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கலந்துரையாடல் மதியம் 12.45ற்கு முடிவுற்றது.
குறித்த கலந்துரையாடலில்
கொரோனா வைரஸின் தற்போதைய நிலை தொடர்பிலும் இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பிலும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமரின் செயலாளரினால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கு கிடைத்த நிதி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் தம்-தரப்பிலான சில முக்கிய விடையங்களடங்கிய அறிக்கை ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பிரதமரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: