கிழக்கு | தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவ கட்டுப்பாடுகள் விசேட அறிக்கை
கொவிட் 19 தடுப்பு செயலணிக்குழு திருக்கோவில்.
பொதுமக்களுக்கான அறிவித்தல்!..
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன, ஆலய வருடார்ந்த, திருக்குளிர்த்தி சடங்கு தொடர்பிலான விசேட கலந்துரையாடல், முடிவுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
திருக்கோவில் ,பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்கடந்த 29.05.2020 காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் கீழ்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கிழக்கிலங்கையில் அற்புதச்சிறப்புடன் விளங்கும் ஆலயமான தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருக்குளிர்த்தி வைபவம், எதிர்வரும் 02.06.2020 அன்று காலை அம்மனின் திருக்கதவு திறத்தல், வைபவத்திற்காக வண்ணக்கர் அவர்களிடம் இருந்து திருக்கதவு திறப்பை, முறைப்படி எடுத்து வருதல் முதல் கொண்டு 2020.06.08 ஆம் திகதி அம்மனின் திருக்குளிர்த்தி வைபவம் வரையுள்ள சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, தீர்மானிக்கப்பட்டுள்ளது
குறித்த விசேட கூட்டத் தொடரின் பின்வருவோர் பிரசன்னமாகியிருந்தனர்
திரு.த.கஜேந்திரன் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் திருக்கோவில்.
திரு.ஆர்.டபிள்யு.கமலராஜன், தவிசாளர், பிரதேச சபை, திருக்கோவில்.
திரு.டி.சி குமார, (கோப்ரல்), காஞ்சிரங்குடா.
திரு. திலகசிறி (எஸ்.ஜ), பொலிஸ் நிலையம் திருக்கோவில்.
திரு.ஆ.யு.பிரசாத், சுகாதார வைத்திய அதிகாரி, திருக்கோவில்
திரு.யு.டீ.மஸ்யுத், வைத்திய அத்தியட்சகர், திருக்கோவில்
திருமதி. சர்மிலா பிரசாந், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், திருக்கோவில்.
திரு.கு.குணபாலசிங்கம், பொதுச் சுகாதார பரிசோதகர், திருக்கோவில்.
திரு.கண இராஜரெட்ணம், சிரேஸ்ட கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம், திருக்கோவில்.
திரு.ம.திருபரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், திருக்கோவில்.
திரு.கே.சண்முகம்பிள்ளை, தலைவர், ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்.
மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர ் கலந்து கொண்டனர்
குறித்த கூட்டத் தொடரில் நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலைமையினை கருத்தில் கெண்டு அம்மன் விழா காலத்தில் மேற் கொள்ளும் நடைமுறைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. இவ்வருட ஆண்டு உற்சவத்தில் பொதுமக்கள் பங்குகொள்ளும ; எந்த ஒரு நிகழ்வும் இடம ;பெற
மாட்டாது.
2. திருக்கதவு திறத்தல் இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் 10 பேருடன் பாதுகாப்பு, சுகாதாரத்தரப பினர் உட்பட 15 பேர் கலந்து கொள்ளலாம்.
3. பூசைகள் கொண்டு வருதல் இந்நிகழ்வில் 10 பேர் பங்குகொள்ள முடியும்.
4. திருவிழா திருவிழா சடங்கில் ஆலயநிர்வாகம் உட்பட 15பேர்கலந்துகொள்ள முடியும்.
5. கல்யாணக் கால் நடல் இந்நிகழ்வில் 10 பேர் கலந்துகொள்ள முடியும்
6. கண்ணகி வழக்குரை பாடுதல்
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் வழக்குரை பாடும் குழுவினரை பட்டியல் படுத்தி 7 நாட்களும் பாடுவதற்குரிய முறையில் ஒழுங்கு படுத்தி மேற்கொள்வர், இது 10ற்கு உட்பட்டவர்களால் பாடப்படும ;
7. திருமடைப்பெட்டி கொண்டு வருதல் (தெண்டல்)
இந்நிகழ்வை ஆலய பரிபாலன சபையினர் பொதுமக்களிடம் இருந்து வீடுகளுக்குச் சென்று பெற்றுவருதல். இதில் 4 பேர் கொண்ட குழுக்களாக செல்லுவதுடன் இக்குழுவையும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவு செய்து கொள்வர்
8. கிராம வீதி ஊர்வலம் இவ்வாண்டில் இந்நிகழ்வானது நடைபெற அனுமதிக்கப்படவில்லை
9. பொங்கல் நிகழ்வுஇவ்வாண்டில் இந்நிகழ்வானது ஆலய பொங்கலுடன் பாகைக்குழுவினர்கள் மட்டும்பொங்கலிடுவது என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 15 பேர் மாத்திரம்பங்குகொள்ளலாம்.
10. திருக்குளிர்த்தி மேற்படி திருக்குளிர்த்திச் சடங்கானது மட்டுப்படுத ;தப்பட்ட ஆலய நிர்வாகத்துடன் மாத்திரம் நடைபெறும்.
11. பொதுவான நேர்த்திக்கடன்
காவடி ஆடுதல், தீச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன்நிகழ்வுகள் எதுவும் இவ்வாண்டில் அனுமதிக்கப்படவில்லை.
12. இவ்வருடம் அன்னதான நிகழ்வு நடைபெறமாட்டாது.
மேற்குறித்த நிகழ்வுகள்வுயாவும் 02.06.2020 முதல் 08.06.2020 வரை நடைபெறும் என்பதுடன் நாளாந்தம் பூசை திருவிழாவானது பி.ப. 4.00 மணி முதல் பி.ப. 7.30 வரை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
எந்த ஒரு நிகழ்விலும் ஆகக்கூடுதலாக 15 பேரிற்குட்பட்ட ஆலய நிர்வாகத்தவர்களேஅனுமதிக்கப ;படுவர், பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
வழமை போல் நடைபெறுகின்ற கடைகள் மற்றும்வேறு வியாபார நிலையங்கள் எதுவும ; ஆலய
வளாகத ;திற்குள்ளேயும் வெளியேயும் நடாத்த அனுமதிக்கப்படவில்லை.
குறித்த காலப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பிரதேச
சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
இந்நிகழ்வுகள் அனைத்திலும் சுகாதார முறையிலான முகக்கவசம் அணிதல், கை கழுவுதல்
சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயமானதாகும்.
மேற்குறித்த தீர்மானங்கள் யாவும் அரசாங்கத்தால் விடுக்கப்படும் மாற்றங்களுக்கேற்ப
மாற்றப்படலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இந்த கட்டுப்பாடுகளானது எமது பிரதேச மக்களை கொவிட் – 19 தொற்று ஏற்படாமல்
காப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.

No comments: