மலையகத்தின் தடம் மாறாத சுவடு ஆறுமுகன் - அகத்தியனின் இரங்கல் பதிவு


(அகத்தியன் நிர்வாகப் பிரிவு)
அமைச்சர், ஆறுமுகன் தொண்டமானின் பிரிவானது மலையக மக்களின் வாழ்வில் தடம் மாறாத சுவடாக காணப்படும், என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை.



ஏன் எனில் நாட்டில் ஒரு அரசியல் வாதி இறந்தால், செய்திகளில் முதன்மை வகிப்பது மலையக அரசியல் வாதிகளின், இறப்பு செய்திகள் என்பது மறுக்க முடியாத ஒரு நிஜமாக காணப்படுகின்றது.

இதற்கு சிறந்த உதாரணமாக மறைந்த மலையக, பிதா சௌமியமூர்த்தி தொண்டமான், மற்றும் மலையக மக்களின் ,மனதில் நீங்காத இடம்  பிடித்த சந்திர சேகரன் ஆகியோர், இவர்களின் வரிசையில் மலையகத்கு விடிவு நோக்கிய பயணத்தில், ஒரு முக்கிய பிரகாசத்தினை இழந்து தவிக்கின்றது மலையகம்.

மலையக மக்கள், மீது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான வைத்திருந்த பற்றிற்கு உதாரணம், இறப்பதற்கு ,ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனது மக்களுக்கான பிரச்சினைகளை, முன்வைத்து அதற்கு தீர்வு காண்பதற்கு பிராதமர் மஹிந்த மற்றும் இந்திய உயஸ்தானிகர் ஆகியோருடனாக இறுதி கலந்துரையாடல்.


மலையக மக்கள், இவர் மீது பற்றுள்ளவர்கள் என்பதற்கும், ஆறுமுகன் சிறந்த மக்கள் சேவகன், என்பதற்கும் சிறந்த ,எடுத்துக்காட்டு எமது மலையக ஊடகவியலாளர்களான சதீஸ், கிஷாந்தன், நீலமேகம் பிரசாந்த், சுசிகரன், விக்னேஸ்வரன், நிக்கலஸ், தயா, கேதீஸ் ஆகியோர் எமக்கு தெரிவிக்கும் (மக்கள் அஞ்சலி, இரங்கல்) செய்திகள் மூலம் எம்மால் அறியமுடிகின்றது.

மலையக மக்களின் ,வாழ்வில் நீங்காத இடம், பிடித்த அன்னாரின், ஆத்மா சாந்தியடைய எங்கள், அகத்தியன், நிர்வாக, மற்றும் செய்திப்பிரிவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
----------------------------------------------------------------------------------------------------------------------
1964ஆம் ஆண்டு, மே மாதம் 29ஆம், திகதி பிறந்த சௌம்யமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆன ஆறுமுகம், தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் ,பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ,அமைச்சரவையில் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக இற்றை வரை இருந்தார்.

ஆறுமுகன் தொண்டமான் ,1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளி,ல் ஈடுபட்டார்,. 1993 ஆம் ஆண்டு, இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம், ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்,. முதற் தடவையா,க 1994 நாடாளுமன்றத், தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி ,பெற்று ,நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர், 2000, 2004, 2010 மற்றும், 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.














No comments: