கொட்டகலை நகரில் மதுபான சாலை உடைக்கப்பட்டு திருட்டு !


ஊரடங்கு அமுலில் இருந்த காலத்தில்  கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று அதிகாலை உடைக்கப்பட்டு மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளன

திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரிவில் உள்ள மது பான சாலையிலே இன்று  அதிகாலை 1.30 மணியளவில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments: