அதிகரிக்கும் ஊரடங்கு சட்டத்தினை மீறிய கைதுகள் !
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் பல
இடங்களில் பொலிசாரினால் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 1169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேற் குறித்த காலப்பகுதியில் 341 வாகனங்களும் பொலிசார் வசம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த மார்ச் 20ம் திகதி ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட தினத்தில்
இருந்து இன்று காலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12,013 வாகனங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


No comments: