எதிர்வரும் மே பதினொராம் திகதி வரை ஊரடங்கு அமுல் !


தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 11ம் திகதி முதல்  ஊரடங்கு கால தேசிய அடையாள அட்டை அனுமதி அமுல்படுத்தப்படும் என்றும்  அதற்குட்பட்ட காலப்பகுதியில் இந் நடைமுறையினை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 11ம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு அமுல் படுத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் இந் நிடைமுறை அமுலாகும் என தெரியவருகின்றது.

நாடளாவியரீதியில் எதிர்வரும்  மே மாதம் பதினோராம் திகதி காலை 05 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: