வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை இழந்த இலங்கையருக்கு விசேட செய்தி !


வெளிநாட்டில் உள்ள  பணியாளர்கள் நாடு திரும்புவுதற்கு அனுமதி கோரியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றிய வேளையில் தற்போது தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளவர்கள்.தொழில் உடன்படிக்கை காலத்தை நிறைவு செய்துள்ளவர்கள் ஆகியோரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

No comments: