அரச மற்றும் தனியார் சேவைகளை ஆரம்பிக்க திட்டம் !


நாட்டினை இயல்பு நடைமுறைக்கு கொண்டுவரும் செயற்படுகளின் கீழ் எதிர் வரும் மே. பதினொராம் திகதி அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக அரச மற்றும் தனியார் பிரிவுகள் ஆரம்பிக்கப்பவுள்ளன.

அனைத்து தனியர் நிறுவனங்களையும் மீள ஆரம்பமிக்க இணக்கம் !

இந் நடைமுறைகள் குறி்த்து ஓரிரு தினங்களில் ஆராயப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபரி அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியர் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக அவர்கள்  பயணிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவை செயற்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை போக்குவரத்து பிரிவு பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடரருந்து போக்குவரத்து தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: