ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் பாரிய இழப்பாகும்
மலையத்தின் இரும்பு மனிதராகவும் விடிவெள்ளியாகவும் மலையக மக்களின்எஎபாதுகாவலனாகவும் உரிமைக்குரலாகவும் இருந்து 35 ஆண்டுகளுக்கு மேலாக மலையக மற்றும் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் நலனுக்காக அரசியல் களப்பணி ஆற்றிய மறைந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பி அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு முழுமலையகத் தமிழர்களுக்கும் இலங்கை வாழ் அணைத்து தமிழ்பேசும் மக்களுக்கும்
பேரிழப்பாகும்.
அமரர் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் போன்று இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாக மிகத்துணிச்சலோடும் அச்சமில்லாமலும் ஜனநாயக ரீதியிலும் போராடிய ஓர் ஒப்பற்ற தலைவரைக் காண்பது அரிது.
மலையகத் தோட்டத் தொழிலார்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர் ஆளும் அரசுகளோடு கைகோர்த்தும் பலநேரங்களில் போராடியும் பல அரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களை தொழிற்சங்க பேதமின்றி ஒன்று திரட்டி போராடி சம்பள உயர்வை
பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல மிகக் கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்த தோட்டத்தொழிலார்களுக்கு ஆயிரக்கணக்கான வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தியும் படித்த பட்டதாரி மலையக இளைஞர் யுவதிகளுக்காக ஒரே நாளில் 3000இற்கு மேற்பட்ட ஆசிரியர் பணி நியமனங்களையும் 500 இற்கு மேற்பட்ட தபால் அதிகாரிப்பணி நியமனங்களையும் வழங்கி அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தார்.
அதேபோன்று மிகக் குறிப்பிடத்தக்க ஒரு செயல்திட்டத்தை மிகத் துணிச்சலாக அவர் செயல்படுத்திய நிகழ்வொன்றை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். கந்தப்பொல பகுதியில் தன்னிச்சையாக விவசாயம் செய்துவந்த தோட்டத்தொழிலாளர்களின் காணிகளை தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து கைப்பற்ற நினைத்தபோது அனைத்து தரப்பினரிடமும் பேசி அந்த வழக்குகளை பின்வாங்கச் செய்து காணிகளை தோட்டத்தொழிலாளர்களுக்கே மீண்டும் பெற்றுக்கொடுத்தார்.
இது போன்று மக்களுக்காக துணிச்சலோடு செயல்பட்டு போராடி மக்கள் உரிமைகளை பெற்றுக்கொடுத்த ஓர் இரும்பு மனிதரை காண்பது மிக மிக அரிது. அவரின் பிரிவினால் இன்று முழு மலையகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் நாமும் தமிழ்பேசும் மக்களின் மாபெரும் சக்தியாக ஊன்றுகோலாக இருந்த மறைந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின்
இழப்பிற்காக வருந்துகிறோம்.
பிரதமர் மஹிந்தராஜபக்ஷ அவர்களின்
மத விவகாரங்களுக்கான இனைப்பு செயலாளர்
வணக்கத்துக்குறிய
பிதா அருட்கலாநிதி எஸ். சந்திரக்குமார்.
மத விவகாரங்களுக்கான இனைப்பு செயலாளர்
வணக்கத்துக்குறிய
பிதா அருட்கலாநிதி எஸ். சந்திரக்குமார்.

No comments: