இன்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் 56வது ஜனன தினம் (கண்ணீரில் மலையகம்)
மலையகத்தினை விட்டு மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 56 வது பிறந்த தினம் இன்று.
வரலாறு .
1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த சௌம்யமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆன ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.
கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக இற்றை வரை இருந்தார்.
ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.


No comments: