அனைத்து தனியர் நிறுவனங்களையும் மீள ஆரம்பமிக்க இணக்கம் !
கொவிட் -19 வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி இலங்கையில் உள்ள சகல தனியார் நிறுவனங்களையும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய திறக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் சேவைகளை ஆரம்பிக்க திட்டம் !
சேவை காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் வீட்டில் இருக்கும் காலத்தில் சம்பளத்தையும் வழங்கவும் சலுத்தவும் அதனடிப்படையில் சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாவை விட அதிகரித்த தொகையை வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும் என அமைச்சர் இதன்போது விளக்கினார்.
குறித்த செயலணியில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தங்கள் அடிப்படையில மேற் கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஜூன் மாத இறுதிக்குள் சம்மந்தப்பட்ட குழுவினர் மீண்டும் ஒன்று கூடி அப்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபயகுணவர்தன மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.வி. விமலவீர ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் சமூக இடைவெளி பின்பற்றவல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments: