ஒரே நாளில் தமிழகத்தில் 771 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி !


தமிழகத்தில் நேற்று  மாத்திரம் 771 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரபல இந்தி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் ஒரே நாளில் ஆகக் கூடிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்ட்டது இதுவே முதல் தடவையாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக  அதிகரித்துள்ளது.

நேற்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 575 ஆண்கள், 196 பெண்கள் ஆவர். 

தமிழகத்தில் இதுவரை 3,320 ஆண்கள், 1,507 பெண்கள், இரண்டு 3-ம் பாலினத்தவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments: