விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்ததால் 07 பேர் உயிரிழப்பு !


விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்ததால் 07 பேர் உயிரிழந்துள்ளதாக இந்நிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை  ஒன இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன் சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதுடன்  குழந்தை உள்பட 7 பேர் பலியாகி உள்ளதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன

 இதன் போது கிராமத்தில் இருந்த 1,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதியில் வசித்து வந்த 800 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி   F.R.I   விசாரணை நடந்து வருகிறது.

ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியிடம்  நிலைமை பற்றி தொலைபேசி வழியே பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி  அவரிடம் உறுதியும் அளித்துள்ளார்.

No comments: