கொழும்பில் இருந்து நாளை 500 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர் !


கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற தன்மை காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கை நாளை இடம் பெறவுள்ளது.

சுமார் 500 பேர் நாளை கொழும்பில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதுடன் 14 நாட்கள் அல்லது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுயதனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: